உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கலையொட்டி வெடிகுண்டு சோதனை 

பொங்கலையொட்டி வெடிகுண்டு சோதனை 

விழுப்புரம், : பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பஸ் நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், மார்க்கெட் பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் ராணி உதவியுடன் சோதனை செய்தனர்.மாவட்ட எல்லைகளிலும் வாகனங்கள் போலீசாரின் சோதனைக்கு பின், அனுமதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாரின் இந்த சோதனையால் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை