உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

 ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவ, மாணவியர்கள் தடகளப் போட்டிகளில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் மாநில அளவில் தஞ்சாவூரில் நடந்த தடகளப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மாணவ, மாணவியர்கள் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் விளையாட்டு துறை சார்பில் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணaவர்களை பள்ளி தாளாளர் பழனியப்பன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி