உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: பயனாளிகளுக்கு சிறப்பு முகாம்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: பயனாளிகளுக்கு சிறப்பு முகாம்

வானுார் : வானுார் ஒன்றியத்தில் பிரதம மந்திரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை கட்டாத பயனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.கடந்த 2015ம் ஆண்டு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் துவங்கியது. கிராமங்களில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2016-17ம் ஆண்டு முதல் 2021-22ம் ஆண்டு வரை வானுார் ஒன்றியத்தில் 3160 வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில், பலர் வீடு கட்டும் பணியை துவக்காமலேயே உள்ளனர்.நிதி பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களால், பயனாளிகள் வீடு கட்டாமல் உள்ளனர். வீடு கட்ட ஆணை பெற்ற பயனாளிகள் விரைவில் முடிக்க அறிவுறுத்தி, அவர்களுக்கு நேற்று வானுார் பி.டி.ஓ., அலுவலகம் மூலம் சிறப்பு முகாம் நடந்தது.திருச்சிற்றம்பலத்தில் நடந்த முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன், ஒன்றிய பொறியாளர் தட்சணாமூர்த்தி மற்றும் 14 வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.இதில், பெரம்பை, இரும்பை, ஆப்பிரம்பட்டு, ராயப்புதுப்பாக்கம், புளிச்சப்பள்ளம், அச்சரம்பட்டு உள்ளிட்ட 15 ஊராட்சிகளைச் சேர்ந்த பயனாளிகள் பங்கேற்றனர். அவர்களிடம் வீடு கட்ட விருப்பம் இல்லை, வீடு கட்ட விருப்பம் தெரிவித்தல், வங்கி கடன் கோரும் கடிதம், இடப்பிரச்னை தொடர்பான கடிதங்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை