மேலும் செய்திகள்
போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை
5 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் குடியரசு தினவிழா நேற்று நடந்தது.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், கோட்ட மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன் தலைமை வகித்து, தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து, போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர், பரிசோதகர், ஓட்டுநர் பயிற்றுனர், அலுவலக உதவியாளர், மேற்பார்வையாளர் மற்றும் கிளை மேலாளர் என விழுப்புரம் போக்குவரத்து கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களையும் சேர்த்து 242 நபர்களுக்கு, மேலாண்மை இயக்குனர் பரிசளித்து பாராட்டினார்.அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அர்சுனன், முதுநிலை துணை மேலாளர் சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
5 hour(s) ago