உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  எஸ்.ஐ.ஆர்., பணி கலெக்டர் ஆய்வு 

 எஸ்.ஐ.ஆர்., பணி கலெக்டர் ஆய்வு 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 4ம் தேதி இறுதி நாள் என்பதால் அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் முகாமிட்டு பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். நேற்று தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பணிகள் குறித்து ஆய்வு செய்து எத்தனை சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்து வருவாய் குறுவட்டங்களில் நடைபெறும் பணிகளை தீவிரமாக கண்காணித்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். டி.ஆர்.ஓ., ஹரிதாஸ், தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் சந்திரசேகரன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் செல்வமூர்த்தி, தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், சமூக நல தனி தாசில்தார் வேல்முருகன், தலைமை சர்வேயர் தேவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழரசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்