மேலும் செய்திகள்
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
21 hour(s) ago
ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா
22-Nov-2025
கணவர் மாயம் : மனைவி புகார்
22-Nov-2025
தி ண்டிவனம் நகரின் மைய பகுதியில், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆரம்ப மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற இந்த பள்ளி, 1911ம் ஆண்டு ஸ்ரீ சங்கவரம் சஞ்சீவி செட்டியார் என்பவரால் துவங்கப்பட்டது. இந்த பள்ளி முதன் முதலில் தெலுங்கில் பெண் கல்வி பாடசாலையாக துவங்கியது. கடந்த 1917ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி முதன் முதலில் தமிழ் வழியில் இரு பாலர்கள் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப பள்ளியாக செயல்பட்டது. அதன் பிறகு 1960ம் ஆண்டு மே 21ம் தேதி தரம் உயர்த்தப்பட்டு இரு பாலர்கள் பயிலும் வகையில் 8ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. பின், 1995ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி முதல் 10ம் வகுப்பு வரை உயர்த்தப்பட்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. நகரத்தில் பிரசித்த பெற்ற இந்த பள்ளி கடந்த 2021ல் ஜெ.ஆர்.சி.,யில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதே ஆண்டில் தமிழக கவர்னரின் 'ராஜ்ய புரஸ்கர்' விருது, சாரண, சாரணிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது பள்ளிக்குழு உறுப்பினராக சஞ்சீவி குப்தா செயல்பட்டு வருகிறார். இந்த பள்ளியின் குறிக்கோள், நுாறு சதவீத தேர்ச்சி, பெண் கல்வியின் முன்னேற்றமாகும். மாணவர்களில் பொது அறிவை வளர்க்கும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் தினந்தோறும் வழங்கப்படுகிறது. வகுப்பறையில், மின் விளக்கு, மின் விசிறி, ஸ்மார்ட் போர்டு, சோலார் பவர் மூலம் மின்சாரம் பயன்பாட்டில் உள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களை நகர்ப்புறத்தில் உள்ள இந்த பள்ளிக்கு வருவதற்காக, இலவச வேன், ஆட்டோ வசதியும் உள்ளது. பள்ளி கடந்த 2009-10ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மறைந்த தமிழக ஆளுநர் ரோசய்யா, கடந்த 2010ல் பள்ளிக்கு வாழ்த்து கூறினார். இதேபோல் 2024-25ம் ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றதற்காக திருச்சியில் நடந்த விழாவில், தமிழக கல்வி அமைச்சர் மகேஷ் பாராட்டி பரிசு வழங்கினார். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியரான வளர்மதி, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். நுாற்றாண்டுளைக் கடந்த திண்டிவனம் மக்களின் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வரும் தற்போது உயர்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் சுதர்சனன் தலைமையில், ஆசிரியர்கள் சத்தியநாராயணன், ராஜேஸ்வரி, சிகாமணி, அறிவழகன், உமா மகேஸ்வரி, சூர்யகலா, அர்ச்சனா, தமிழரசி, சுஜாதா, விஜயலட்சுமி, சுந்தரி, ஜெபக்குமார் ஆகியோர் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு பாடுபட்டு வருகின்றனர் .
திண்டிவனம் நகரின் பழமை வாய்ந்த பள்ளியில் முதலிடத்தை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி பெற்று வருவது, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பெருமைப்படுகிறோம். பள்ளியில் ஆண்டுதோறும் பொம்மை கல்யாணம், ராதாகிருஷ்ணன் திருக்கல்யாணம் நடைபெறுவதை அனைவரும் பாராட்டுகின்றனர். கடந்த 114 ஆண்டுகளாக பண்பாடு மற்றும் கலாசாரத்தை பேணி காத்து வருகிறோம். பள்ளியில் நுாறு சதவீத தேர்ச்சிக்காக தொடர் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம். -சுதர்சனன், பள்ளி தலைமையாசிரியர்.
எங்கள் பள்ளி நுாற்றாண்டைக் கடந்து இன்றளவும் நகர மக்களின் நன்மதிப்பை பெற்று சிறந்து விளங்குகிறது. 'முயற்சி செய்; முன்னேறு' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் ஒழுக்கம் மற்றும் கல்வி என்பது எங்கள் பள்ளியின் இரு கண்களாக கருதப்படுகிறது. பள்ளிக்குழு உறுப்பினர் சஞ்சீவி குப்தா ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை போதித்து வருகின்றோம். பெண் கல்வியை ஊக்குவிப்பதில் முன்னுரிமை கொடுத்து, சிறந்த, தரமான கல்வியை தருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். -நாகராஜ குப்தா, பள்ளி செயலாளர்.
நகரின் மைய பகுதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆரம்ப மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த பல மாணவர்கள் வழக்கறிஞர், ஆடிட்டர், அரசு உயர் பதவிகளில் உள்ளனர். ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினர் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். பெண்களுக்கென தனியாக உள்ள இந்த பள்ளியில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு சிறந்த கல்வியை போதித்து, அவர்களின் வாழக்கை தரம் உயர பாடுபட்டு வரும் பள்ளி நிர்வாகத்திற்கு எனது வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். -சரவணன், 12வது வார்டு கவுன்சிலர்.
21 hour(s) ago
22-Nov-2025
22-Nov-2025