மேலும் செய்திகள்
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
21 hour(s) ago
ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா
22-Nov-2025
கணவர் மாயம் : மனைவி புகார்
22-Nov-2025
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட மருத்துவ கூடுதல் இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட சேர்மேன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முகாமில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, காசநோய், இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம், உளவியல் ஆலோசனை உட்பட 17 வகை மருத்துவ சிகிச்சைகளுக்கு, டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். கண்டாச்சிபுரம், சித்தாத்துார், ஆலம்பாடி, மேல்வாலை, கீழ்வாலை, வீரங்கிபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து 800 பேர் பயனடைந்தனர். முகையூர் வட்டார மருத்துவர் சுகுமாறன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவிச்ந்திரன், லுாயிஸ், ராஜிவ்காந்தி, முகையூர் சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், கவுன்சிலர் மீனாகுமாரி, தேவசேனாதிபதி, ஜீவா மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள் பங்கேற்றனர்.
21 hour(s) ago
22-Nov-2025
22-Nov-2025