உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரதம்

விழுப்புரம், : பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிடக் கோரி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், ஆசிரியர் கூட்டணி செயலாளர் லுார்துசேவியர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் குமார், உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். செயலாளர் ஷேக்மூசா கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். அரசாணை 243ஐ ரத்து செய்திட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் வழங்குதல், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடந்தது. துணை பொது செயலாளர் கருணாநிதி நிறைவுரை ஆற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை