உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு; தீயணைப்பு துறையினர் மீட்பு

வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு; தீயணைப்பு துறையினர் மீட்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.விழுப்புரம் அடுத்த கோலியனுார் பனங்குப்பம் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி, 45; இவரது வீட்டின் பக்கவாட்டில் உள்ள காலி மனையில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் நாக பாம்பு புகுந்தது.வீட்டுக்குள் நுழைய முயன்ற அந்த பாம்பு வீட்டின் வளர்ப்பு பூனை தொடர்ந்து கத்தியதைக்கேட்டு அங்கு லட்சுமி வந்து பார்த்தபோது, பூனை முன் 8 அடி நீளமுள்ள நாக பாம்பு படம் எடுத்து ஆடியதைப் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன், முன்னணி வீரர்கள் பிரபு, முகேஷ், ராஜேஷ், கவுதம்ராஜ், பாரதிதாசன் ஆகியோர் விரைந்து சென்று, நாகபாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி