உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் அகிலா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் இளையராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் டி.எஸ்.பி., சுரேஷ் சிறப்புரையாற்றினார்.அப்போது, அரசு அலுவலர்கள், குறிப்பாக ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் குரூப் 1 அலுவலர்களின் முக்கியத்துவம் மற்றும் நிர்வாக அதிகாரம் குறித்தும், அந்த பணிகளுக்கு தேர்வு எழுதி சாதிக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசு தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து, அரசு அலுவலர் செந்தமிழ்வேலன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் கேட்கப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு எளிய முறையில் தீர்வு காணும் ஆலோசனை, பொதுத்தமிழ், திறன், பகுத்தறிவு, அறிவியல் மற்றும் நடப்பு விவகாரங்களில் கேட்கப்பட்ட கேள்விகளின் வெவ்வேறு பகுதிகள் எவ்வாறு கேட்கப்படும் என்பதையும் விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை