உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால் முன்னிலை வைத்தார்.செயலாளர் கீதா, சட்ட ஆலோசகர் லுாசியா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து, மத்திய அரசு கொண்டு வந்த 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான 18 நல வாரியங்களையும், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நலச்சட்டம், விவசாய தொழிலாளர் நலவாரியம், மீனவர் நலவாரியம் மற்றும் பிற துறைகளில் இயங்கும் 36 நலவாரியங்களையும் பாதுகாக்கும் அறிக்கையை தமிழக அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.பெட்ரோல், டீசல், சிமென்ட், மணல், கம்பி போன்ற கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை