உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாட்டின் ஒருமைப்பாட்டை காத்திட பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்

நாட்டின் ஒருமைப்பாட்டை காத்திட பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்

விழுப்புரம் : நாட்டின் ஒருமைப்பாட்டை காத்திட பயங்கரவாத செயல்கள் ஒழிக்கப்பட வேண்டுமென இளைஞர்களுக்கான கருத்தரங்கில் எம்.பி., ஆனந்தன் அறிவுரை வழங்கினார்.விழுப்புரம் நேரு யுவகேந்திரா வளாகத்தில் மாவட்ட இளையோர் கருத்தரங்கம் நடந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மகளிர் திட்ட அலுவலர் பத்மாவதி, அரசு கல்லூரி திட்ட அலுவலர் மகாவிஷ்ணு, ஆலோசனைக் குழு உறுப்பினர் குத்புதீன், சாரணர் சங்க செயலர் பாபுசெல்வதுரை முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் எம்.பி., ஆனந்தன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: பயங்கரவாதத்தில் ஈடுபடுவோர் 25 முதல் 35 வரை உள்ள படித்த, பட்டதாரி இளைஞர்களாக உள்ளனர்.

வேலை கிடைக்காததால் மனம் மாறி தீய வழியில் செல்கின்றனர். இளைஞர்களை சீர்படுத்திடும் வகையில் நேருயுவகேந்திரா போன்ற அமைப்புகள் ஒன்றியங்கள் தோறும் இயங்கி வருகிறது. இந்த அமைப்புகள் இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கி வருகிறது.முதல்வர் ஜெ., இளைஞர் நலனை மேம்படுத்த இதற்கென தனி அமைச்சகத்தையே ஏற்படுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் பயங்கரவாதத்தை ஒழித்திட முனைப்புடன் செயல்படுகிறது. பயங்கரவாத செயல்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு சாதி மத பேதமின்றி ஏற்றத்தாழ்வுகள் நீங்கிடவும், பொரு ளாதாரம் உயர்ந்திட வேண்டும்.பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த ஜெ., திட்டங்களை தீட்டி வருகிறார். இளைஞர்கள் பல்வேறு நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் அனைவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டு நன்கு பேசி பழக வேண்டும். சமூகத்தில் ஆண், பெண் சமமாக பாவிக்க வேண்டும். நாடு பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு எம்.பி., ஆனந்தன் பேசினார்.நிகழ்ச்சியில் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை