உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அவலூர்பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

அவலூர்பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

அவலூர்பேட்டை : அவலூர்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. அவலூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாணியர் தெரு, பெரிய தெரு, முருங் கமரத்தெரு, மொட்டை பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட 19 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஏரியில் கரைப்பதற்காக வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஏற்றி, மேள, தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதில் 19 பெரிய விநாயகர் சிலைகள் மற்றும் வீடுகளில் பிரதிஷ்டை செய்த சிறிய விநாயகர் சிலைகள் அனைத்தும் ஏரியில் விசர்ஜனம் செய்தனர். செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன், சப்- இன்ஸ்பெக்டர் மோகனமுத்து மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை