விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் 41 வார்டுகளுக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை அறிவித்தது. விழுப்புரம் நகராட்சியில் அ.தி.மு.க., சார்பில் சேர்மன் பதவிக்கு போட்டியிடும் பாஸ்கரன் நேற்று அமைச்சர் சண்முகம் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார். மேலும் 41 வார்டுகளுக்கு வேட்பாளர் களை தலைமை அறிவித்து நேற்று அதிகாரப்பூர்வ அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இதில் 33 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதில் நகராட்சி 1வது வார்டு வேட்பாளராக சாந்தகுமார், ராதாகிருஷ்ணன்(2), ராமதாஸ்(3), சேகர்(4), செந்தில்(5), பாலகிருஷ்ணன்(6), குமார்(7), 8வது வார்டுக்கு ஹமுரினிசா அறிவிக்கப்பட்டனர்.
மேலும் 9ம் வார்டு வேட்பாளராக பவுஜாகனி, ரமேஷ்(11), செந்தில்குமார்(12), ராஜ்குமார்(13), வரதராஜபெருமாள்(14), டில்லி(15), பாபு(16), சந்தோஷ் குமார்(17), சாகுல் அமீது(18), 19வது வார்டிற்கு ராமச்சந்திரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதே போல் 20வது வார்டிற்கு சங்கீதா, தங்கசேகர்(21), ஆதிலட்சுமி(22), முகமது யூசுப்(23), லோகநாதன்(24), செந்தாமரை கண்ணன்(25), சேகர்(26), மதுரைகண்ணு(27), நாராயணசாமி(28), விஜயகுமார்(29), 30ம் வார்டுக்கு முத்துலட்சுமி போட்டியிடுகின்றனர்.
மேலும் 31ம் வார்டிற்கு மல்லிகா, சிவசங்கரி(32), நூர் அலாவுதீன்(33), அபிராமன்(34), சக்திவேல்(35), விஜயா(36), பாலசுப்ரமணியன்(37), சந்திரா(38), சுமதி(39), தமிழரசி(40), பூங்கொடி(41) மற்றும் 42வது வார்டிற்கு அழகுநாதன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். , இதில் 10வது வார்டு வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.