உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒன்றுபட்டு தேர்தல் பணி மாவட்ட காங்., தீர்மானம்

ஒன்றுபட்டு தேர்தல் பணி மாவட்ட காங்., தீர்மானம்

திண்டிவனம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திண்டிவனம் நகர காங்., அலுவலகத்தில் நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் தனுசு தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் புலிமணி, வழக்கறிஞர்கள் சுப்பையா, பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். நகர காங்., தலைவர் வினாயகம் வரவேற்றார்.உள்ளாட்சித் தேர்தலில் மாநில காங்., தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்கள் முடிவை ஏற்று ஒன்றுபட்டு பணியாற்றுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், வட்டார தலைவர்கள் ராமராஜன், காந்தி, அருமைச்செல்வம், சுந்தரமூர்த்தி, அமலதாஸ், கோவிந்தன், இளைஞர் காங்., நிர்வாகிகள் ராஜா, சுரேஷ், பேராசிரியர் மதிவாணன், சிறப்பு அழைப்பாளர்கள் காந்திதாஸ், ராஜகுரு, நாராயணசாமி, ரவிச்சந்திரன், கண்ணன், சுப்ரமணி உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ