மேலும் செய்திகள்
ஸ்ரீ ரமண அகாடமியில் கணித கண்காட்சி
5 hour(s) ago
மனித உரிமை தின விழிப்புணர்வு
6 hour(s) ago
பா.ஜ., மனு
6 hour(s) ago
ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு
6 hour(s) ago
ராஜபாளையம்: 'ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதைக்கான மண் பரிசோதனை பணிகள் தொடங்கியுள்ளன.ராஜபாளையத்தில் நகர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரயில்வே மேம்பாலமும் அதன் அருகே சுரங்கப்பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த மேம்பால பணி கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில் சுரங்கப்பாதைக்கான கான்கிரீட் பிளாக்குகள் தயாராகி அடுத்த கட்டப் பணிகள் நடைபெறாமல் ஒன்றரை ஆண்டுகளாக மழையிலும், வெயிலிலும் காட்சிப் பொருளாக மாறி இருந்தது.இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து சுரங்கப்பாதை நிலை குறித்து படத்துடன் செய்தி வெளியிட்டு வந்தோம்.இந்நிலையில் ஒரு வாரமாக டி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ்.கே ரோடு இரண்டு பக்கமும் மொத்தம் ஐந்து இடங்களில் இதற்கான மண் பரிசோதனை துவங்கி நடந்து வருகிறது.இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மாற்றப்பட்ட திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக மண்ணில் 17 மீட்டர் முதல் 20 மீ. வரை குழாய் மூலம் தோண்டி சோதனை பணி நடந்து வருகிறது. பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago