உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / களம் கபளீகரம், கட்டட கழிவுகள், ஆக்கிரமிப்பு

களம் கபளீகரம், கட்டட கழிவுகள், ஆக்கிரமிப்பு

ராஜபாளையம்: குடியிருப்புகளின் கழிவு நீர் கலப்பு, கண்மாயில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை, முட்புதர்கள், விளை பொருட்கள் கொண்டுவர பாதையில்லை போன்ற சிக்கல்களால் புளியங்குளம் கண்மாய் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.ராஜபாளையம் தாலுகா அலுவலகம் ஒட்டி அமைந்துள்ளது புளியங்குளம் கண்மாய். அய்யனார் கோயில் ஆற்று நீர், அணைத்தலை ஆற்று நீர் என ஆற்றின் இரண்டாவது நீர் ஆதாரமாக இருப்பதால் 100 ஏக்கருக்கும் அதிகமாக நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் என பாசன பகுதிகளை கொண்டுள்ளது.நகர் பகுதி அருகாமையில் இருப்பதால் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப் பட்டுள்ளது. குடியிருப்புகளில் வெளியேறும் கழிவு நீர் கலப்பு காரணமாக ஆகாய தாமரை, முட்கள் படர்ந்து நீரை மறைத்துள்ளன.மெயின் ரோட்டின் கண்மாய் கரையில் கட்டடக் கழிவுகளை கொட்டி நிரந்தர தள்ளுவண்டி கடைகள், சங்க அலுவலகம் அமைத்துள்ளனர். மாமிச கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், மருத்துவ கழிவுகளையும் ஆள் இல்லாத இரவு நேரங்களில் குவித்து செல்கின்றனர்.நீர்ப்பிடிப்பு பகுதியின் உட்பகுதியில் கால்பந்து மைதானம் அமைத்துள்ளதுடன் அதற்காக மண் மேடிட்டு ஆக்கிரமிப்பு நடந்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதி குறைந்து கோடை காலங்களில் பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.விளை பொருட்கள் சேமித்து பாதுகாக்க ஒதுக்கப்பட்ட களம் தனியார் கட்டடங்களாக மாற்றி உபயோகித்து வருகின்றனர். விளைப் பொருட்களை கொண்டு வரவும், கண்மாய் கரைகள் வழியே அறுவடை இயந்திரங்கள் கொண்டு செல்வதற்கான பாதை முறைப்படுத்தாமல் உள்ளது. பிரச்சனை குறித்து கலெக்டர் வரை கோரிக்கை வைத்தும் முறையான பதில் இல்லை. கண்மாய் முழுவதும் ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள், ஆகாயத்தாமரைகளை அகற்றி ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து நீர் பிடிப்பு ஆதாரங்களை மீட்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி