உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / --பஸ் ஸ்டாப் அமைத்தும் பயனில்லை-- ரோட்டில் காத்திருக்கும் நோயாளிகள்

--பஸ் ஸ்டாப் அமைத்தும் பயனில்லை-- ரோட்டில் காத்திருக்கும் நோயாளிகள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை முன்பு அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாப் முறைப்படுத்தப்படாமல் உள்ளதால் நோயாளிகள் பயணிகள் வெயிலில் பஸ்சுகாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. தாலுகாவில் பெரிய மருத்துவமனையாகவும் தினமும் 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 150 உள்நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் 500 பேர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.நீண்ட காலமாக சிதிலமடைந்து இருந்த பஸ் ஸ்டாப் தொடர் கோரிக்கைக்கு பின் அகற்றப்பட்டு எம்.எல்.ஏ., நிதியில் புதிதாக கட்டப்பட்டது. இருப்பினும் நோயாளிகள், பயணிகளுக்கான வசதிகள் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை. குறிப்பாக மது போதை ஆசாமிகள் ஓய்வெடுக்கும் இடமாக பயன்படுத்துவதுடன் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. பஸ் ஸ்டாப்பில் இருந்து மெயின் ரோட்டில் பஸ்கள் வருவதை பார்த்து தெரிந்து கொள்ள முடியாமல் ஜன்னல் பகுதி ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகையால் தடுக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் விவரம் குறித்த அட்டவணையும் குறிப்பிடவில்லை.இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி செய்து தரப்படாததால் பெண்கள் இதை உபயோகிக்க அச்சம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் பயணியர் பயன்படுத்தும் வகையில் தினமும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.எனவே அடித்தட்டு மக்கள் பயன்படும் வகையில் பஸ் ஸ்டாப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து முழு பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி