உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் 110 கி.மீ., தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் 110 கி.மீ., தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மலைப்பகுதியில் தீ விபத்துகளை தடுக்க,. 110 கிலோமீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் ஆகிய நான்கு வனச்சரங்களில் யானைகள், மான்கள், புலிகள், பாம்புகள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.2023 நவ., டிச., மாதங்களில் பெய்த மழையின் காரணமாக மலைப்பகுதி பசுமை சூழலில் காணப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத நிலையில் வனப்பகுதி மிகவும் வறண்டு செடி, கொடிகள் காய்ந்து சருகாகி இருந்தது. இதனால் வனப் பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு விடுமோ என வனத்துறையினர் அச்சமடைந்தனர்.இந்நிலையில் தேனி மாவட்ட மலைப்பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் மலைப்பகுதியிலும் தீ பரவாமல் தடுப்பதற்கு தீர்த்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதன்படி ஒவ்வொரு வனச்சரகத்திலும் 10 அடி அகலத்தில், மொத்தம் 110 கிலோமீட்டர் நீளத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார் இந்நிலையில் நேற்று வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை