உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெண் வக்கீலை வெட்டிய 5 பேர் கைது

பெண் வக்கீலை வெட்டிய 5 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சொத்து பிரச்சனை காரணமாக பெண் வக்கீல் ரேவதியை வெட்டிய அவரது உறவினர்கள் 3 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ரேவதி, 40, இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது உறவினர்களான ராஜபாளையம் நல்லமநாயக்கன் பட்டியை சேர்ந்த உறவினர்கள் ஜெயபிரகாஷ், 52, பாலாஜி,47, சவுந்தராஜன், 57 ஆகியோருக்கு இடையே சொத்து பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள தனது அலுவலகத்தில் ரேவதி இருக்கும்போது, உறவினர்கள் மூவரும், சம்சிகாபுரத்தை சேர்ந்த ராஜலிங்கம்,54,, அருண்,27, ஆகிய ஐந்து பேரும் அலுவலகத்தில் இருந்த ரேவதியின் தந்தையை தாக்கினர். தடுக்க வந்த வக்கீல் மகேஸ்வரனையும் மிதித்து கீழே தள்ளினர். வக்கீல் ரேவதியை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வக்கீல் ரேவதியை தாக்கிய 5 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி