உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பயன்பாட்டிற்கு வரும் பஸ் ஸ்டாண்ட்

திருத்தங்கலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பயன்பாட்டிற்கு வரும் பஸ் ஸ்டாண்ட்

சிவகாசி, : திருத்தங்கலில் 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் இன்று ஆக., 15- முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. திருத்தங்கல் நகரின் வெளியே விருதுநகர் ரோட்டில் 2013 ல் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ 3.69 கோடி மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு 2016 ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் வணிக வளாகங்கள், சுகாதார வளாகங்கள், பொருட்கள் பாதுகாக்கும் அறை, டிரைவர், நடத்துனர் ஓய்வு அறை, குடிநீர் வசதிக்காக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி, உயர்கோபுர மின் விளக்குகள் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. பஸ் ஸ்டாண்டு பயன்பாட்டிற்கு வந்த சில நாட்கள் மட்டுமே இங்கு பஸ்கள் வந்து சென்றன. அதன் பின்னர் செயல்படவில்லை. ஆரம்ப காலகட்டங்களில் பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பிய 30 டவுண் பஸ்கள், 35 புறநகர் பஸ்கள், 50 க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். இதனால் விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களுக்கு செல்கின்ற பயணிகள் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறிச் செல்லலாம். ஆனால் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டில் இல்லாததால் இந்த நகரங்களுக்கு செல்கின்ற பயணிகள் சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு வர வேண்டியிருந்தது. இந்நிலையில் மாநகராட்சி, வருவாய்த்துறை, போலீசார் இணைந்து பஸ் ஸ்டாண்டினை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டில் சேதம் அடைந்த கட்டடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் சிவகாசியில் இருந்து விருதுநகர், மதுரை செல்லும் பஸ்கள் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும். அதேபோல் மதுரை, விருதுநகரில் இருந்து வருகின்ற பஸ்களும் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும், அரசு பஸ் டிப்போ விற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி.. சுப்பையா கூறியதாவது, பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வருகின்ற அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் சென்று வர அறிவுறுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி