உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

சிவகாசி : சிவகாசியில் விருதுநகர் மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் அருண் தலைமை வகித்தார். செயலாளர் மான்ராஜ், பொருளாளர் பாண்டியராஜ் முன்னிலை வகித்தனர். வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.கூட்டத்தில், பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் அரசு விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும், ஆலைகளில் தவிர்க்க முடியாமல் ஏற்படும் வெடி விபத்துகளில் உயிரிழக்கக்கூடிய தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்பு செலவினை சங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை