உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குறைந்த வாடகையில்  வேளாண் கருவிகள்

குறைந்த வாடகையில்  வேளாண் கருவிகள்

விருதுநகர் : கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை பாலையம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பயிர்களுக்கான மருந்து தெளிக்கும் டிரோன், மல்லாங்கிணர்தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் சரக்கு வாகனம், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை பகுதிகளில் செயல்படும் சேதுநாராயணபுரம், 427 மம்சாபுரம், பி.ராமச்சந்திராபுரம், 508 மம்சாபுரம், அச்சம் தவிழ்த்தான், பூவாணி, நாச்சியார்பட்டி, மாரனேரி, குமிழங்குளம், மேட்டமலை, நென்மேனி, எஸ்.திருவேங்கிடபுரம், செங்குன்றாபுரம், தொப்பலாக்கரை, எம்.ரெட்டியபட்டி, காளையார் கரிசல்குளம், முத்துராமலிங்காபுரம், ஆத்திப்பட்டி, பாலவநத்தம் ஆகிய கூட்டுறவு சங்கங்களில் டிராக்டர், பிற கருவிகள் குறைந்த வாடகைக்கு கிடைக்கிறது. www.rcs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இ வாடகை மூலம் முன்பதிவு செய்யலாம். இது தொடர்பாக நேரடியாகவும் செயலாளரை அணுகி பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை