உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் மாணவியர் சந்திப்பு

முன்னாள் மாணவியர் சந்திப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் ஏ.கே.டி தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவியர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். தாளாளர் கிருஷ்ணம ராஜு தலைமை வகித்தார். 1947 முதல் 2017 ஆண்டு வரையில் பயின்ற முன்னாள் மாணவிகள் ஆயிரத்து 500 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்றனர். தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தியதுடன் பயின்ற பள்ளி வகுப்புகளில் சக மாணவிகளுடன் அமர்ந்து நினைவு, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். குழுவாக போட்டோ எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ