| ADDED : ஜூன் 27, 2024 11:54 PM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் உயர்த்தப்பட்ட நடைமேடை மற்றும் மேம்பாலம், போதிய இருக்கை, வசதிகள் குடிநீர் மின்விளக்குகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் லிப்ட் வசதி, இரண்டாவது பிளாட்பார்மில் பென்சிங் வசதி, 694 சதுர மீட்டர் பரப்பளவில் டூவீலர் பார்க்கிங், 420 சதுர மீட்டர் பரப்பளவில் கார் பார்க்கிங் பூங்கா ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டது. தில் லிப்ட் அமைக்கும் பணி முடியும்தருவாயை நெருங்கியுள்ளது. ஸ்டேஷன் முன்புறத்தில் ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு முகப்பு தோற்றம் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.மேலும் டூவீலர், கார் பார்க்கிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரயில்வே போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு வரை ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வேஷன் பயணிகளுக்கு வெயிட்டிங் ஹால் கட்டும் பணியும் நடந்து வருகிறது.இன்னும் சில மாதங்களில் திட்டப் பணிகள்முழுமையாக முடிவடைந்து புதிய பொலிவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.