உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஹாரன் அடித்ததால் ஆத்திரம் டிரைவர் மீது தாக்குதல்

ஹாரன் அடித்ததால் ஆத்திரம் டிரைவர் மீது தாக்குதல்

காரியாபட்டி: ரோட்டின் நடுவில் நிறுத்தி இருந்த காரை எடுக்க ஹாரன் அடித்த தனியார் பஸ் டிரைவரை தாக்கி, பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.காரியாபட்டியில் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 2:15க்கு மதுரையில் இருந்து கமுதிக்கு செல்லும் தனியார் பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் காரியாபட்டி ஏ. நெடுங்குளத்தைச் சேர்ந்த சதுரகிரி 42, ஓட்டினார். டாஸ்மாக் கடை முன் நடுரோட்டில் கார் நின்றது.காரை எடுக்க வேண்டி டிரைவர் ஹாரன் அடித்தார். காரில் இருந்த இலுப்பைகுளத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஆத்திரமடைந்து, பஸ் டிரைவரின் சட்டையை பிடித்து தாக்கி, பஸ் முன் பக்க கண்ணாடியை உடைத்தார். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி