உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜயகரிசல்குள அகழாய்வில் கிடைத்த மணிகள், பொம்மை

விஜயகரிசல்குள அகழாய்வில் கிடைத்த மணிகள், பொம்மை

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நேற்று முன்தினம் துவங்கின. முதற்கட்டமாக மூன்று குழிகள் தோண்டப்பட்டன. இரண்டாம் நாளான நேற்று 7 செ.மீ., ஆழத்தில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, 20க்கும் மேற்பட்ட கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள், வட்ட சில்லு கண்டெடுக்கப்ட்டன. இதனால், அங்கு, நீண்ட காலத்திற்கு முன்பே செங்கல் கட்டுமானம் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. தொல்லியல் இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், ''மூன்றாம் கட்ட அகழாய்வில் தோண்டும்போது மேற்பரப்பிலேயே கண்ணாடி மணிகள் கிடைத்தன. ஏற்கனவே நடந்த இரண்டு கட்ட அகழாய்விலும், அதிக அளவில் கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன.''இதனால், இதற்கான தொழிற்சாலை நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். செங்கற்களும் கிடைத்திருப்பதால் கட்டுமானப் பணியும் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ