உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இறைச்சி கடைக்காரர் வெட்டிக்கொலை

இறைச்சி கடைக்காரர் வெட்டிக்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே இறைச்சி கடைக்காரர் வெட்டிக்கொலை செய்தவர்களை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.சிவகாசி தாலுகா கிருஷ்ண நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சங்கிலியாண்டி மகன் பிரசாந்த், 28, இறைச்சி வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த வாரம் கிருஷ்ணன் கோவிலில் ஆட்டுக்கறி கடை போட்டு கறி விற்பனை செய்தார்.இந்நிலையில் கிருஷ்ணன்கோவில் அருகே மதுரை ரோட்டில் நேற்று முன்தினமும் இறைச்சி கடை போடுவதற்காக தனது உறவினர் வீரபாண்டியின் வீட்டில் தங்கி இருந்த நிலையில், அதிகாலையில் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக பிடிப்பதற்காக உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை