உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீர்மான நோட்டை எடுத்துச்சென்ற தலைவர்

தீர்மான நோட்டை எடுத்துச்சென்ற தலைவர்

விருதுநகர், : விருதுநகர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மான நோட்டை தலைவர் எடுத்து சென்றதால் கவுன்சிலர்கள் அவரது காரை மறித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்ட ஊராட்சி கூட்டம் சரிவர நடத்தவில்லை மாவட்ட கவுன்சிலர்கள் கலெக்டர் ஜெயசீலனிடம் புகார் அளித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில்தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள்15வது மாநில நிதி குழுமத்தின் நிதி ரூ.8 கோடியை தங்கள் நிர்வாக பணிக்கு ஒதுக்குவது உள்ளிட்ட 15 தீர்மானங்களை நிறைவேற்ற கோரினர்.இந்நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி நிதி ஒதுக்கீடு தீர்மானத்தை தவிர்த்து மற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதாக கூறினார். அப்போது கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல்கூட்டத்தை விட்டு வெளியேறினார். அப்போது கவுன்சிலர்கள் துணை தலைவரான சுபாஷினியை வைத்து நிறைவேற்றி கொள்வோம் என்று கூறினர். இந்நிலையில் தலைவர் உடனடியாக கூட்ட அறைக்கு வந்து தீர்மான நோட்டை எடுத்து கொண்டு அலுவலகத்தில் இருந்தே காரில் வெளியேற முற்பட்டார். அப்போது மாவட்ட கவுன்சிலர்கள் அவரது காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.3 மணி நேரத்திற்கு மேலாக தர்ணா தொடர்ந்தது. மாவட்ட ஊராட்சி தலைவரான வசந்தி, கலெக்டர் ஜெயசீலனைசந்தித்து கவுன்சிலர்கள் சரிவர கூட்டத்தை நடத்த விடுவதில்லை என புகாரளித்தார். அடுத்து தனியாக கலெக்டரை சந்தித்த மாவட்ட ஊராட்சி செயலாளர் விஜயலட்சுமி நேரடியாக சென்று நடந்ததை கூறிய பின், அவர் ஜூலையில் மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என உறுதி அளித்தார்.இதையடுத்து மாவட்ட ஊராட்சி கூட்டம்தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர். டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை