மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3 ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அளவீடு செய்து ஆவணப்படுத்தும் பணி துவங்கியது. விஜய கரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் 1200க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொருட்களை அளவீடு செய்யும் பணி துவங்கியது. இதில் மிகச்சிறிய கண்ணாடி மணியிலிருந்து பெரிய செங்கல், பானை என அனைத்து பொருட்களின் எடை, உயரம், அகலம் உள்ளிட்டவைகள் துல்லியமாக அளவீடு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட உள்ளது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், மூன்றாம் கட்ட அகழாய்வில் ஒன்றரை மாதத்திலேயே அதிகமான பொருட்கள் கிடைத்துள்ளது. பணிகள் முடிவடையும்போது முதல் இரு அகழாய்வை விட கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது அகழாய்வு நடைபெறும் இடத்திலேயே பொருட்கள் அளவீடு செய்யப்பட்டு ஆவணப்படுத்தும் பணி துவங்கியுள்ளது, என்றார்.
13 hour(s) ago
13 hour(s) ago