உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குவாரி வெடிவிபத்தால்  சேதமடைந்த குடியிருப்புகளுக்கு நிவாரணம் காரியாபட்டி டி.கடமங்குளம் மக்கள் புகார்

குவாரி வெடிவிபத்தால்  சேதமடைந்த குடியிருப்புகளுக்கு நிவாரணம் காரியாபட்டி டி.கடமங்குளம் மக்கள் புகார்

விருதுநகர்: காரியாபட்டி ஆவியூர் டி.கடமங்குளத்தில் குவாரி வெடிவிபத்தால் சேதமடைந்த குடியிருப்புகளுக்கு உரிய ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என அவ்வூர் மக்கள் விருதுநகரில் கலெக்டரிடம் மனு அளித்தனர். கலெக்டர் ஜெயசீலனிடம் அவர்கள் அளித்த மனு: நேற்று வெடி விபத்து ஏற்பட்ட ஆவியூர் கிரஷர் குவாரியில் வெடி மருந்து குடோன் செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் சட்ட விரோதமாக அதிகளவில் தோண்டுவதும், வெடிமருந்து அதிகம் வைத்தும், இரவு நேரங்களில் செயல்பட்டும் குவாரி செயல்பட்டு வந்தது. கிரஷரில் பாறை உடைக்க வெடி வெடிக்கும் போது அதன் அதிர்வலையால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து பலமுறை வருவாய் அலுவலர்களிடமும், அந்த குவாரி உரிமையாளர்களிடமும் புகார் அளித்துள்ளோம். ஆனால் எந்த பலனுமில்லை. நேற்று முன்தினம் நடந்த வெடிவிபத்தின் போது குடியிருப்பு கட்டடங்கள் சேதம் அடைந்தன. பொருட்கள் உடைந்து விட்டன. 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ரோடு மறியல் செய்த போது எங்களை கலைக்கவே முயற்சித்தனர். தற்போது வரை யாரும் ஆய்வு செய்ய வரவே இல்லை. கிரஷர் குவாரியால் எங்கள் கிராமத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு முறையாக அளவீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என கேட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ