| ADDED : ஜூன் 20, 2024 04:05 AM
காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி அருகே மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் பறக்கும் படை தாசில்தார் ராஜ்குமார், துணை தாசில்தார் பாலமுருகன், ஆர்.ஐ., ஆனந்த கிருஷ்ணன் கொண்ட குழுவினர் நேற்று காலை 5.15 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மதுரை நோக்கிச் சென்ற வேனை மறித்தனர். ஓரமாக வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். சோதனையில் 33 பாலிதீன் பைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. வேன், அரிசியை கைப்பற்றி காரியாபட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.தப்பி ஓடிய டிரைவர் யார், அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.