உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி அர்ச்சுனா நதியில் பாலம் கட்டும் பணி தீவிரம்

இருக்கன்குடி அர்ச்சுனா நதியில் பாலம் கட்டும் பணி தீவிரம்

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செல்ல மேம்பாலம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருக்கன்குடியில் மாரியம்மன் கோயில் வைப்பாறு நதி அர்ச்சுனா நதிஆகிய இரு நதிகள் இணையும் இடத்தில் உள்ள மணல்மேட்டில் அமைந்துள்ளது.இரு நதிகளிலும் மழைக்காலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது கோயிலுக்கு பக்தர்கள் சென்று சாமி கும்பிட முடியாமல் தவித்து வந்தனர்.இந்நிலையில் இருக்கன்குடியில் இரு நதிகளையும் இணைத்து அணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டதால் இருக்கன்குடியில் தண்ணீர் தேக்கப்பட்டதோடு மழைக்காலத்தில் இருக்கன்குடி அணை வழியாக பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இருக்கன்குடி அணை நிரம்பி இரு நதியிலும் தண்ணீர் திறக்கப்படும் போது பக்தர்கள் கோயில் மேட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. வெளியூரில் இருந்து கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கலந்து பேசி அணைக்கட்டு வழியாக பக்தர்கள் கோயிலுக்கு நடந்து சென்று தரிசனம் செய்து வர கடந்த காலங்களில் அனுமதி பெற்று தந்தனர்.இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மேட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், மேலும் ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க கோயில் நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருக்கன்குடியில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணி சுமார் 100 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சாத்துாரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நடந்து செல்ல தனிநடைபாதை,மழைக்காலத்திலும் பக்தர்கள் கோயிலுக்கு எளிதாக செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.பழைய அணைக்கட்டின் தரைமட்ட பாலம் அகற்றப்பட்டு மண் பரிசோதனை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது பில்லர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதனால் நீண்ட காலமாக மாரியம்மன் பக்தர்கள் வலியுறுத்தி வந்தபாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை