| ADDED : ஜூலை 09, 2024 04:38 AM
விருதுநகர்: காரியாபட்டி பேரூராட்சி தேர்தலில் 8வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் சாந்தி மறு ஓட்டு எண்ணிக்கை கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின்புறம்உள்ள சமுதாயக்கூடத்தில் மறு ஓட்டு எண்ணிக்கை நடந்தது.2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காரியாபட்டி பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர்சாந்தி 23 ஓட்டுகளும், வெற்றி பெற்ற தி.மு.க., கவுன்சிலர் நாகஜோதி 445 ஓட்டுக்களும் பெற்றிருந்தனர். இதில் சாந்தி தன் வெற்றி தடுக்கப்பட்டுள்ளதாகவும், மறு ஓட்டு எண்ணிக்கை வேண்டும் என்று கோரி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள சமுதாயக்கூடத்தில் வைத்து காரியாபட்டி செயல் அலுவலர் சந்திரகலா தலைமையில் பா.ஜ., வேட்பாளர் சாந்தி, அவரது வழக்கறிஞர்கள் முன்னிலையில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர். 1வது எண்ணில் பா.ஜ., என காட்டவில்லை என்று கூறி வேட்பாளரின் கணவர் ரமேஷ் பிரச்னை செய்தார். போலீசார் சமரசம் செய்த பின் கலைந்து சென்றனர். இதற்கான முடிவுகளை அறிக்கையாக கலெக்டரிடம் செயல் அலுவலர் சமர்பித்துள்ளார். விரைவில் கலெக்டர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பார்.