உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அரசு மருத்துவமனையில் நாய்கள் நோயாளிகள் அச்சம்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நாய்கள் நோயாளிகள் அச்சம்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நோயாளிகள், உடன் தங்கியிருப்பவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் நடமாடுவதற்கு அஞ்சுகின்றனர்.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இங்கு காலை, மாலை நேரத்தில் வளாகம், சுரங்கத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை அவ்வழியாக நடந்து செல்பவர்கள், டூவீலரில் செல்பவர்களை துாரத்துகின்றன. இதே நிலை அரசு மகப்பேறு மருத்துவமனையிலும் நீடிக்கிறது. இங்கு உறவினர்களை பார்க்க வருபவர்கள் மீதான உணவுகளை நாய்க்கு வைக்கின்றனர்.இதனால் நாய்கள் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறாமல் கூட்டமாக திரிகின்றன. இவை குழந்தைகள், பெரியோர்கள், நோயாளிகளை கடிப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களும் எதிர்பார்க்கின்றன.இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி