உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சமூக வலைத்தள செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் கருத்தரங்கில் தகவல்

சமூக வலைத்தள செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் கருத்தரங்கில் தகவல்

மதுரை : 'சமூக வலைத்தளம் மூலம் பெறப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்' என மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும் நெட்வொர்க்கிங் துறை சார்பில் நடந்த சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.மதுரை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் பேசியதாவது: சமூக வலைத்தளம் மூலம் பெறப்படும் செயலிகள், ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். பணம் செலுத்துமாறு கூறினால் செலுத்தாதீர்கள். 'சிம் கார்டு காலாவதியாக போகிறது; சேவையை தொடர லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்' என கூறினால் தவிர்க்கவும்.ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு எப்போதும் 'https' முகவரி கொண்ட இணையதளத்தை பயன்படுத்தவும். ஆன்லைனில் பழகிய நபருக்கு பணம் அல்லது பரிசு அனுப்புவதை தவிர்க்கவும். பிரவுசிங் சென்டர் கணினிகளை பயன்படுத்தும்போது பதிவிறக்கம் செய்யப்பட்டவற்றை நிரந்தரமாக நீக்க வேண்டும்.பொருட்களை விற்பதாக கூறினால் நம்பாதீர்கள்; பணம் செலுத்தாதீர்கள். தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். சைபர் குற்ற புகார்களுக்கு 1930 ல் தொடர்பு கொள்ள வேண்டும் என்றனர். கல்லுாரி முதல்வர் சுஜாதா, டீன் பிரியா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி