மேலும் செய்திகள்
வத்திராயிருப்பில் லட்ச்சார்ச்சனை நிறைவு
3 hour(s) ago
ஆண்டாள் திருப்பாவை முற்றோதல் ஊர்வலம்
3 hour(s) ago
நகை திருட்டு
3 hour(s) ago
சகோதரிகள் மாயம்
3 hour(s) ago
மதுரை : மாணவர்களின் ஒழுக்கமான செயல்களே அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் என மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் (எஸ்.எல்.சி.எஸ்.,) 30வது ஆண்டு விழாவில் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசினார்.இவ்விழாவில் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசுகையில், ஒரு மாணவனின் ஒழுக்கமான செயல்களே அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். கடின உழைப்புடன், உயர்ந்த குறிக்கோளும் மாணவர்களுக்கு அவசியம். அவ்வாறு இருப்பவர்கள் தரமான வாழ்க்கையை எளிதில் பெறுவர் என்றார்.முதல்வர் சுஜாதா ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் குருபாஸ்கர் வரவேற்றார். பிற கல்லுாரிகளில் இருந்து வரப்பெற்ற வாழ்த்துக்களை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் துறைத் தலைவர் சுப்பிரமணியன் வாசித்தார்.முன்னாள் மாணவர்கள் சதீஷ்ராவ், ஜெயகுமார், பிரபு, ஹர்ஷன், கோபாலன் சீனிவாசன் கல்லுாரியின் செயல்பாடு, தரமான கட்டமைப்பு, பெருமைகளை குறிப்பிட்டனர். பல்வேறு பிரிவு ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. நிர்வாக மேலாண்மையர் ராம்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். டீன் பிரியா நன்றி கூறினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago