உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லாரி மோதி டிரைவர் பலி

லாரி மோதி டிரைவர் பலி

அருப்புக்கோட்டை : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்,64, இவர் மினி லாரி டிரைவர். நேற்றுமுன்தினம் காலை 6:00 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே உடையநாதபுரம்விலக்கு ஓரத்தில் லாரியை நிறுத்தி, டயர்களை சோதனை செய்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரி லட்சுமணன் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். பந்தல்குடி போலீசார் டாரஸ் லாரி டிரைவர் சேலம் மாவட்டம் ஓமலூர்மல்லிகோட்டையைச் சேர்ந்த குமாரை 45, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை