| ADDED : ஜூன் 11, 2024 07:38 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் ஜெயபாக்கியத்துக்கு 22, இருபதாண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அருப்புக்கோட்டை தாலுகா பாளையம்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் ஜெயபாக்கியம். இவர் கடந்த ஆண்டு 17 வயது சிறுமியுடன் பழகி திருமணம் செய்வதாக கூறி காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரை அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.காரில் கடத்திய குற்றத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல், ரூ, 10 ஆயிரம் அபராதம் என மொத்தம் 30 ஆண்டுகள் தண்டனை விதித்தும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டு நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.