மேலும் செய்திகள்
எலியார்பத்தி டோல்கேட் கட்டணம் அதிகரிப்பு
08-Oct-2025
நக்கீரன் கோபால் வீட்டில் வெடிகுண்டு சோதனை
08-Oct-2025
காருக்கு தீ வைப்பு
08-Oct-2025
வடபத்ரசாயி கோயிலில் புஷ்ப யாகம்
08-Oct-2025
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கையெழுத்து இயக்கம்,உறுதிமொழி, ஊர்வலம்,கருத்தரங்கம் என நடந்த நிகழ்ச்சிகளுக்கு நாடார்கள்உறவின்முறை தலைவர்சுதாகர் ஆலோசனை வழங்கினார். கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். முதல்வர் செல்லத்தாய் வரவேற்றார். கலெக்டர்ஜெயசீலன் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்தும், கையெழுத்து இயக்கம், மாணவியர்களின் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏற்பாடுகளை என்.சி.சி., அதிகாரி சுப்பிரமணியன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பாக்கியராஜீ செய்தனர். கல்லூரி தலைவர் மயில்ராஜன் நன்றி கூறினார்.*ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறை சார்பில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சங்கர் கண்ணன் ராதா மகேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜ் மெட்ரிக் பள்ளி, மல்லி உள்ளூர் பட்டிய அரசு பள்ளி, மாம்சாபுரம் மகரிஷி வித்யாலயா மற்றும் சிலந்திப்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணன்கோவில் கலைமகள் பள்ளி, வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளிகளில் நடந்தது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், போலீசார் பங்கேற்றனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025