உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுநீரக கற்களால் வரும் பாதிப்புகள்

சிறுநீரக கற்களால் வரும் பாதிப்புகள்

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் சிறுநீரக கற்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிறுநீரக பாதையில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் பரவலாக உள்ளது. மேலும் தினமும் தேவைக்கு குறைவாக தண்ணீர் குடிப்பது, சிறுநீர் வெளியேற்றுவதை அடக்கி வைப்பது ஆகியவற்றால் சிறுநீரக கற்கள் உருவாகிறது.இந்த பாதிப்பு துவங்கும் போது தெரிவதில்லை. மாறாக நீர்கடுப்பு, சிறுநீரக தொற்றுக்காக பரிசோதனைகள் செய்யும் போது கற்கள் இருப்பது கண்டறியப்படுகிறது.அதன் பின் கல்லின் அளவை பொருத்து மருந்து, மாத்திரையில் கரைப்பது, அறுவை சிகிச்சை செய்து எடுப்பது போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.ஆனால் பலர் செயலிழக்கும் நிலைக்கு வந்த பின் மருத்துவரை அணுகுவதால் எவ்வித பயனும் கிடைக்காமல் இறுதியில் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற பாதிப்புகளில் சிகிச்சை பெறுபவர்கள் குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை மருத்துவரின் ஆலோசனை படி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.இது குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி