உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

ஸ்ரீவில்லிபுத்தூர் : தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம் , என தென்காசி தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது தெரிவித்தார்.தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசியதாவது; ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடன் புதிய தமிழகம் கட்சி உருவாக்கப்பட்டதால் தொடர்ந்து அதன் பாதையில் பயணிப்போம். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போம். அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடு இன்றி அனைத்து வசதிகளும் கிடைத்திட தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தில் 8 கோடி மக்களுக்காக குரல் கொடுப்போம்.தேர்தலில் நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் கூட அதனை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம் என்றும் மக்களுடன் இருப்போம். எனக்காக வாக்களித்தவர்களுக்கும், தேர்தல் பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ராமராஜ், மாவட்ட செயலாளர்கள் திருப்பதி, ஒன்றிய செயலாளர் கண்ணன், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

panneer selvam
ஜூன் 30, 2024 14:40

Dr. Krishna samy Sir , you took the wrong decision by joining AIADMK alliance just before the election since Tenkasi seat was denied by BJP . More over You have settled in Chennai and never visited Tenkasi areas . So how you will raise the voice of Tenkasi people


மேலும் செய்திகள்





புதிய வீடியோ