உள்ளூர் செய்திகள்

பரிசோதனை முகாம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம், திருநெல்வேலி காவேரி மருத்துவமனை சார்பில் காமராஜர் இதய பாதுகாப்பு வாகன மூலம் இலவச இதய பரிசோதனை முகாம் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். முகாம் தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் காந்தி, ரோட்டரி நிர்வாகிகள் மயில் பாலசுப்பிரமணியன், சண்முக நடராஜ் முகாமினை துவக்கி வைத்தனர்.பள்ளி தாளாளர் பொன் பிரபாகர், தலைமையாசிரியர் சாம் ஜெபராஜ், முகாம் துணை தலைவர் செல்வகுமார், நிர்வாகிகள் பங்கேற்றனர். 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இதய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்