உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வத்திராயிருப்பில் வறண்டு வரும் கண்மாய்கள் வருத்தத்தில் விவசாயிகள்

வத்திராயிருப்பில் வறண்டு வரும் கண்மாய்கள் வருத்தத்தில் விவசாயிகள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் குறைந்து வறண்டு வருவதால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர். போதிய அளவிற்கு வடகிழக்கு பருவ மழை பெய்து கண்மாய்கள் நிரம்புமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.வத்திராயிருப்பில் கான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், சேதுநாராயணபுரம், புதுப்பட்டி, தம்பி பட்டி, கோட்டையூர், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம், குன்னுார் பகுதிகளில் ஏராளமான கண்மாய்கள் உள்ளது. இதனால் அப்பகுதியில் ஆண்டு தோறும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது.தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையின் போது பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்டால் கண்மாய்கள் முழு அளவில் நிரம்பும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்து வருகின்றனர்.தற்போது கடந்த சில மாதங்களாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மழை இல்லாததால் பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் குறைந்து வறண்டு காணப்படுகிறது. வத்திராயிருப்பு பெரியகுளம் விராக சமுத்திரம் கண்மாய்களிலும், பெரும்பாலான கிணறுகளிலும் தண்ணீர் குறைந்து வருகிறது.இதனால் அடுத்த நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் போதிய அளவிற்கு வடகிழக்கு பருவமழை பெய்து கண்மாய்கள் நிரம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வத்திராயிருப்பு விவசாயிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை