| ADDED : ஜூலை 31, 2024 10:41 PM
விருதுநகர்:விருதுநகரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது.அதில் பங்கேற்ற மாநில பொதுச் செயலர் மாசிலாமணி பேசியதாவது:பருவம் தவறிய மழையால் மானாவாரி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நீர் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படவில்லை. மானாவாரி விவசாயம் நடக்கும் மாவட்டங்களின் நீர்நிலைகளை துார்வாரி, கரைகளை பலப்படுத்தி தண்ணீரை பாதுகாக்க தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்.விவசாயிகளுக்கு தனி ஊக்க மானியம் வழங்க வேண்டும். விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்து, பாதுகாப்பதற்கான கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும். பொது விநியோக அங்காடிகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து, வேளாண்துறையில் பராம்பரியமிக்க பூஞ்சை தானியங்களை பராமரிக்க தனித்துறை அமைக்க வேண்டும்.இவற்றை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என செப்., 9ல் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி ஆகிய மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.