உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆபத்தான மேல்நிலைத் தொட்டியால் அச்சம்

ஆபத்தான மேல்நிலைத் தொட்டியால் அச்சம்

காரியாபட்டி: காரியாபட்டி துலுக்கன்குளம் ஊராட்சி இ.தாமரைக்குளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. நாளடைவில் பில்லர்கள் சேதம் அடைந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியில் தெரிகின்றன.தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. தண்ணீரின் எடைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுமோ என்கிற அச்சம் உள்ளது. ரோட்டோரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். இதன் அருகே பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி மாணவர்கள் எப்போதும் இதன் அருகே நடந்து செல்வர். விபத்து அச்சம் இருப்பதால் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்திற்கு முன் அப்புறப்படுத்தி புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை