உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாயில் கொட்டப்படும் குப்பை சுகாதாரக்கேட்டால் பாதிப்பு

கண்மாயில் கொட்டப்படும் குப்பை சுகாதாரக்கேட்டால் பாதிப்பு

விருதுநகர் : விருதுநகர் ஒன்றியப்பகுதிகளில் உள்ள பல்வேறு கண்மாய்களின் கரைகளில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் பருவ மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.விருதுநகர் ஒன்றியப்பகுதிகளில் உள்ள 45 ஊராட்சிகளிலும் கண்மாய்கள் உள்ளன. இதில் நீர்வளத்துறை கண்மாய்களும் உள்ளன. இந்நிலையில் இவற்றின் கரைகளில் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. அதே போல் கரையை திறந்தவெளியாக பயன்படுத்துவதும் அதிகம் உள்ளது. இந்த சுகாதார பிரச்னையை ஊராட்சி நிர்வாகங்களும் சரி செய்வது கிடையாது. திடக்கழிவு மேலாண் மை திட்டத்தின் படி முறைப்படி குப்பையை அகற்ற வேண்டும். ஆனால் நீர்நிலைகளில் கொட்டுவது மழைக்காலங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், கண்மாய் முழுவதும் குப்பை பரவி மண்ணின் வளம் கெடும். நீரின் தன்மை மாறி பயன்படுத்துவதற்கு லாயக்கற்றதாகி விடும். இன்று பல்வேறு கண்மாய்கள், ஊருணிகள் பாசி பிடித்து பச்சை பசேலென இருக்க காரணம், அவற்றின் கரைகளில், ஓரங்களில் குப்பை கொட்டுவது தான். இதை துவக்க கட்டத்திலே சரி செய்ய வேண்டும்.விருதுநகர் தாதம்பட்டி கண்மாயில் இந்த பிரச்னை உள்ளது. செங்குன்றாபுரம் ஊருணியில் குப்பையால் பாழாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகங்கள் குப்பையை கண்மாயில் கொட்டுவதை தடுத்து முறைப்படி திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி