உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2வது மனைவியின் மகளுக்கு தொல்லை கொடுத்தவருக்கு 40 ஆண்டு தண்டனை

2வது மனைவியின் மகளுக்கு தொல்லை கொடுத்தவருக்கு 40 ஆண்டு தண்டனை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் வெள்ளையன், 48, வனத்துறை ஊழியர். சில ஆண்டுகளுக்கு முன், இவரது மனைவி இறந்ததால், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி புகாரின்படி, போக்சோ சட்டத்தில் வெள்ளையனை, ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், வெள்ளையனுக்கு 40 ஆண்டுகள் சிறை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை