| ADDED : ஏப் 18, 2024 05:04 AM
ராஜபாளையம்: தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தரவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் இது போன்ற நன்மைகளை செய்ய வேண்டும் எனில் நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் கொடுத்தால் மட்டுமே செய்ய முடியும், என தென்காசி தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.ராஜபாளையத்தில் தென்காசி லோக்சபா புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கிருஷ்ணசாமி பேசுகையில், கடந்த ஐந்தாண்டு காலம் இத்தொகுதியில் வெற்றி பெற்று சென்ற தி.மு.க.,வை சேர்ந்த வேட்பாளர் எந்த நன்மையும் செய்து தரவில்லை. தொகுதிக்கு ஒரு வளர்ச்சியும் கொண்டுவரவில்லை. பெண்கள் தாய்மார்கள் வேலை வாய்ப்புகளின்றி உள்ளனர் .தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தரவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் இது போன்ற நன்மைகளை செய்ய வேண்டும் எனில் நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் கொடுத்தால் மட்டுமே செய்ய முடியும்.,இவ்வாறு அவர் பேசினார்.ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் பேசுகையில், கடந்த 50 ஆண்டு காலங்களில் என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை. வரும் தேர்தலில் என்னை வெற்றி பெற செய்யும் பட்சத்தில் இதுவரை இருந்த குறைகள், தேக்கங்கள் சரி செய்யப்படும். ஒவ்வொரு கிராமங்கள் முதல் பேரூராட்சி, நகராட்சி என அனைத்து குதிகளிலும், மக்களின் அனைத்து குறைகளையும் சரி செய்யும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவேன், -என பேசினார்.