உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு

ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர்கள் மயில் பாலசுப்பிரமணியன் தலைமை, சண்முக நடராஜ், பீமா ஆனந்த் முன்னிலை வகித்தனர். புதிய தலைவராக ஜெயராஜ், செயலாளராக சின்னத்தம்பி, பொருளாளராக முத்துவேல் ராஜா பதவியற்றனர்.புதிய நிர்வாகிகளை வாழ்த்தி ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ஜெகநாதன், முத்துராமலிங்ககுமார், சுப்புராம் பேசினர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விழாவில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ